தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இசையாஞ்சலி  

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இசையாஞ்சலி  

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இசையாஞ்சலி  


ADDED : ஏப் 29, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில்,  திருமுதுகுன்றம் இசைச்சங்கம் சார்பில், சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, இசையாஞ்சலி நிகழ்ச்சி கடந்த, 27ம் தேதி துவங்கி வரும், 1ம் தேதி வரை நடக்கிறது. 

இதையொட்டி, கடந்த 27ம் தேதி திருக்கடையூர் பாலசுப்ரமணியன் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி; நேற்று முன்தினம் நெய்வேலி விஜயலட்சுமி வீணை நிகழ்ச்சி; நேற்று வடபழனி ஓதுவார் திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது.

இன்று கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி, நாளை காட்டுமன்னார்கோவில் ஸ்ரீ சிவாலயா நடனபள்ளி, குரு நட்டுவாங்கக் கலைமணி நிவேதா ராஜேந்திரன் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

திருமுதுகுன்றம் இசை சங்கமம் தலைவர் கே.எஸ்.ஆர்., பள்ளி தாளாளர் சுந்தரவடிவேல் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். செயலர்கள் ரவீந்திரநாதன், ரமேஷ், பொருளாளர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us