/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் சிறப்பு வரவேற்பு
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் சிறப்பு வரவேற்பு
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் சிறப்பு வரவேற்பு
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் சிறப்பு வரவேற்பு
ADDED : மார் 15, 2025 02:13 AM

கிள்ளை, :கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லிம்கள் பட்டு சாத்தி வரவேற்பு கொடுத்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையில், நேற்று நடந்த மாசி மக திருவிழாவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.
அதையொட்டி, நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பூவராக சுவாமி, கிள்ளை தைக்கால் மாரியம்மன் கோவிலில் எழுந்தருளினார். நேற்று காலை அங்கு பூவராக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிள்ளை தைக்கால் சையத் ஷா ரஹமத்துல்லா தர்காவில், பாரம்பரியம் முறைப்படி பூவராக சுவாமிக்கு, டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில் முஸ்லிம்கள் சார்பில், ஹிந்து முறைப்படி, தாம்பூல தட்டில் பழங்கள், 5 படி அரிசி, 501 ரூபாய், பட்டு சாத்தி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வரவேற்பு கொடுத்தனர்.
தர்காவிற்கு ஆச்சாரியார்கள் சென்று, மாலை, நாட்டு சர்க்கரை, வத்தி உள்ளிட்டவற்றை டிரஸ்டி சையத் சக்காப்பிடம் வழங்கி, உலக அமைதி சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் ரவிந்திரன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
தர்கா டிரஸ்டி சையத் சக்காப் கூறுகையில், ''பூவராக சுவாமி மாசி மகத்திற்கு வரும்போது, முன்னோர்கள் வழக்கப்படி ஏழு தலைமுறையாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல, அவர்கள் கொடுக்கும் நாட்டு சர்க்கரையை வைத்து பாத்தியா ஓதி பிரசாதம் வழங்கப்படும்,'' என்றார்.