/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளை காளியம்மனுக்கு இஸ்லாமியர்கள் சீர் வரிசை
/
கிள்ளை காளியம்மனுக்கு இஸ்லாமியர்கள் சீர் வரிசை
ADDED : ஜூன் 03, 2024 05:59 AM

கிள்ளை : மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நேற்று கிள்ளை காளியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு, இஸ்லாமியர்கள் சீர் வரிசைகள் வழங்கினர்.
கிள்ளை காளியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில், உள்ளூர் மற்றும் நாகப்பட்டிணம் உட்பட வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். அந்த வகையில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிள்ளை தைக்கால் சையத் ஷா ரஹகமத்துல்லா தர்கா டிரஸ்டி சையத் சக்காப் தலைமையில், இஸ்லாமியர்கள் இந்து முறைப்படி, தாம்பூல தட்டில் காளியம்மனுக்கு பட்டு புடவை, வாழைப்பழம், தேங்காய், ஆப்பிள், பூ, வெற்றிலை பாக்கு என 11 தாம்பூல தட்டில் சீர் வரிசை பொருட்கள் கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம், வழங்கினர்.
நிகழ்ச்சியில், கிராமத் தலைவர் அரங்கநாயகம், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் செங்குட்டுவன், முன்னாள் மீனவ கூட்டுறவு வங்கி தலைவர் நீதிமணி, பந்தளராஜன், செந்தில்குமார், நகர செயலாளர் தமிழரசன், முன்னாள் தலைவர் தேவநாதன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.