/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா துவக்கம்
/
முத்துமாரியம்மன் கோவில் செடல் விழா துவக்கம்
ADDED : ஆக 13, 2024 05:49 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழா துவங்கியது.
விருத்தாசலம் காந்தி நகர், 3வது தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் 25ம் ஆண்டு ஆடி செடல் திருவிழா நேற்று காப்பு கட்டும் நிகழ்வுடன் துவங்கியது. இதையொட்டி, காலை 4:30 மணிக்கு மேல் கணபதி ேஹாமம், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வந்து, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்வாக, வரும் 16ம் தேதி மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், செடலணிந்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் மஞ்சள் நீராட்டு, இரவு அம்மன் தாலாட்டு நடக்கிறது. 18ம் தேதி சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனையுடன் நிறைவு பெறுகிறது.

