/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாட்டியாஞ்சலி விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
நாட்டியாஞ்சலி விழா: எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மே 31, 2024 02:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில், பரதநாட்டிய சலங்கை பூஜை விழாவில், மாணவிகளுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., கேடயம் வழங்கினார்.
கடலுாரில், ஸ்ரீயுவ சூர்யா நாட்டிய இசைப் பள்ளி சார்பில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். பின், பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். விழாவில், லீமா அய்யப்பன், தாசில்தார் சத்தியன், குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சிறப்பு தலைவர் மருதவாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இசைப் பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.