/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் என்.சி.சி., பயிற்சி முகாம் நிறைவு
/
சிதம்பரத்தில் என்.சி.சி., பயிற்சி முகாம் நிறைவு
ADDED : ஜூலை 30, 2024 05:26 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், பத்து நாட்கள் நடந்த என்.சி.சி., மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.
சிதம்பரம் அண்ணாமலை நகரில், என்.சி.சி., தமிழ்நாடு 4வது கூட்டு தொழில்நுட்ப கம்பனி சார்பில், ஆண்டு கூட்டு பயிற்சி முகாம் கடந்த 18ம் தேதி துவங்கியது. கடலூர், விழுப்புரம், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து பள்ளி கல்லுாரிகளில் பயிலும் 500 என்.சி.சி., மாணவ, மாணவியர் பயிற்சி பெற்றனர்.
துப்பாக்கி சுடுதல், அணி வகுப்பு நடைபயிற்சி, வரைபட பயிற்சி, கூடாரம் அமைத்தல், ராணுவ தடை ஓட்டம், தூரம் அறிதல் மற்றும் ராணுவம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
பயிற்சிகளை, கல்லுாரி மற்றும் பள்ளி என்.சி.சி., மாணவர் படை அதிகாரிகள் கேப்டன் ரவிச்சந்திரன், லெப்டினன்ட் பாலமுரளி, முதல் நிலை அதிகாரிகள் ரத்தினமணி, ராஜசேகர், ராஜா, அனிதா, இரண்டாம் நிலை அதிகாரிகள் ஞானசேகரன், திருவரசமூர்த்தி, உதயசங்கர், கார்த்திக் மற்றும் ராணுவ ஜே.சி.ஓ. சுபேதார் பினுஸ், மதுரை வீரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
10 நாட்கள் நடந்த முகாம் நிறைவு பெற்றயடுத்து நேற்று நிறைவு விழா நடந்தது. தொழில் நுட்ப கம்பெனியின் கட்டுப்பாட்டு அதிகாரி கர்னல் வாசுதேவ நாராயணன் மற்றும் சேனா மெடல் தலைமை தாங்கினர்.
துணை கட்டுப்பாட்டு அதிகாரி புதுச்சேரி முதலாவது கடற்படை லெப்டினன்ட் கமான்டர் லோகேஷ் பங்கேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மாணவர் பிரிவில், விழுப்புரம் திருவெண்ணை நல்லூர் பள்ளி, மாணவியர் பிரிவில் இரையூர் அருணா மேல்நிலைப் பள்ளிக்கு கோப்பை வழங்கப்பட்டது. கல்லூரி அளவிலான கோப்பையை அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் பிரிவு என்.சி.சி., மாணவர்கள் பெற்றனர்.