/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் தீயணைப்பு நிலையம் தேவை சமூக ஆர்வலர், பொதுமக்கள் கோரிக்கை
/
புவனகிரியில் தீயணைப்பு நிலையம் தேவை சமூக ஆர்வலர், பொதுமக்கள் கோரிக்கை
புவனகிரியில் தீயணைப்பு நிலையம் தேவை சமூக ஆர்வலர், பொதுமக்கள் கோரிக்கை
புவனகிரியில் தீயணைப்பு நிலையம் தேவை சமூக ஆர்வலர், பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மே 01, 2024 07:17 AM
புவனகிரி : புவனகிரியில் சுற்றுபகுதி கிராம மக்கள் நலன் கருதி, தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.புவுனகிரி வளர்ந்து வரும் நகரமாகவும், பேரூராட்சி, ஒன்றியம், தாலுகா மற்றும் சட்டசபை தொகுதியின் தலைமையிடமாகவும் உள்ளது.
விவசாயமே முக்கியத் தொழிலாக, முற்றிலும் கிராமங்களான இங்கு, குடிசை வீடுகள் நிறைந்துள்ளது. இப்பகுதியில் திடீரென தீ விபத்தில் மீட்பு பணிக்கு பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு சாலை விரிவாக்கப்பணிகளுக்கு மணல் ஏற்றி வரும் வாகனங்களால் தாமதம் ஏற்படுகிறது.
கடந்த 2011 ம் ஆண்டு ஜூன் மாதம் 7 ம் தேதி புவனகிரி ஆட்டுத்தொட்டித் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானதடன், ஒரு பெண் குழந்தை தீயில் கருகி பலியானது.
மேலும், பலர் காயங்களுடன் உயிர்த்தப்பினர். இந்த கோர விபத்தில் இருந்து புவனகிரி மையப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து ஊழல் எதிர்ப்பு இயக்கம், வர்த்தகர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது வரை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே தொகுதி மற்றும் தாலுகாவின் தலைமை இடமான புவனகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் வக்கீல் குணசேகரன் கூறுகையில்:
கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து இப்பகுதியில் தீயணைப்பு நிலையம் வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம், சுற்றுபகுதி கிராமங்களில் முற்றிலும் குடிசை வீடுகளாக உள்ளது.
ஆபத்து காலங்களில் தீயணைப்பு வாகனங்களுக்காக காத்திருப்பதில் முற்றிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். என்றார்.