/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடப்பிரிவுகளுக்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி சேர்மன் ஸ்ரீராம்

ADDED : ஜூலை 01, 2024 06:42 AM

கடலுார் : இன்ஜினியரிங் பாடப் பிரிவுகளுக்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி சேர்மன் ஸ்ரீராம் பேசினார்.
'தினமலர்' நாளிதழ் சார்பில் கடலுார், சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
இதில், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி சேர்மன் ஸ்ரீராம் 'திறன் வளர்ப்பு' என்ற தலைப்பில் பேசியதாவது:
'தினமலர்' நாளிதழ் சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி இங்கு நடத்தப்படுகிறது. இன்ஜினியரிங்கில் படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் கடந்த 2 ஆண்டுகளில் இன்ஜினியரிங் துறையில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. எந்த பாடப்பிரிவில் சேரப்போகிறோம் என்பதை தெரிந்து கொண்டு அதற்கான திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்ஜினியரிங் படிப்பு 4 ஆண்டுகளாகும். இன்ஜினியரிங் படிக்கும் 3வது ஆண்டிலேயே பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் 'கேம்பஸ் இன்டர்வியூ' நடத்தி, தங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது. இன்ஜினியரிங்கில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகிறது. மாணவர்களின் எண்ணங்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
அப்போது தான் எந்த இலக்கை அடைய நினைக்கிறோமே அடைய முடியும். 'கேட்' நுழைவுத் தேர்வு எழுதினால் என்.ஐ.டி., - ஐ.ஐ.டி., போன்ற கல்லுாரிகளில் அட்மிஷன் கிடைக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்புகளை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கல்லுாரியில் படிப்பது மட்டுமின்றி வீட்டிற்கு வந்து படித்தால் எதையும் சாதிக்க முடியும்.
கடந்த காலங்களில் நிறுவனங்கள் தங்களுக்கு தகுதியான நபர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் நிலை இருந்தது.
ஆனால், தற்போதைய கால கட்டத்தில் கல்லுாரி படிப்பை முடித்ததும் 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நபர்களை தேர்வு செய்கிறது.
இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது. குறிப்பாக, புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படுகிறது. பெற்றோரின் எதிர்பார்ப்புகளை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.