/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெளியாட்கள் நியமனம்; வருவாய் அதிகாரிகள் அலட்சியம்
/
வெளியாட்கள் நியமனம்; வருவாய் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜூன் 19, 2024 01:21 AM
மாவட்டத்தில் சில தாலுகா அலுவலகங்களில் ஆன்லைன் மூலமாக வருமானம், ஜாதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கின்றனர்.
ஆனால், சான்றிதழை பரிசீலனை செய்து, அப்ரூவல் அளிக்கும் பணியில் வருவாய்த் துறை உயரதிகாரிகள் சிலர் அலட்சியம் காட்டுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, வருவாய்த் துறைக்கு தொடர்பில்லாத வெளியாட்களை தங்களுக்கென தனியாக நியமித்து அவர்களிடம் அப்ரூவல் பணியை ஒப்படைத்து விட்டு வழக்கமான பணிக்காக வெளியில் ஹாயாக சென்று விடுகின்றனர்.
இதனால், சான்றிதழ் தொடர்பான பணிகளில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.