/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழக ஹாக்கி அணியில் நெல்லிக்குப்பம் வீராங்கனை
/
தமிழக ஹாக்கி அணியில் நெல்லிக்குப்பம் வீராங்கனை
ADDED : ஆக 01, 2024 06:44 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்கவரப்பட்டை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி வீரப்பன் மகள் வான்மதி, 16; அங்குள்ள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அளவில் சாதித்த மாணவிக்கு, விளையாட்டிலும் ஆர்வம் அதிகம்.
இந்நிலையில், நெல்லிக்குப்பத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு, சிவராஜ் என்பவர் இலவசமாக ஹாக்கி பயிற்சி வழங்க துவங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வான்மதி, அவரிடம் பயிற்சி பெற துவங்கினார். கடந்த மூன்று ஆண்டாக லீக் போட்டிகளில் விளையாடினார்.
தற்போது, தமிழக அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இவரது திறமையை பார்த்து இவருடன் பயிற்சி பெறும் எய்தனூரை சேர்ந்த கோபிகா, 14 ,சாலியா,14, மேல்கவரப்பட்டு பிருத்திபா,14; ஆகியோரும் தமிழ்நாடு சப் ஜூனியர் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
இதுபற்றி வான்மதி கூறுகையில், விளையாட்டில் ஆர்வம் இருந்தும் ஏழ்மை தடையாக இருந்த நிலையில், சிவராஜ் அளித்த பயிற்சியால் தமிழக அணியில் விளையாடி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது லட்சியம். நெல்லிக்குப்பத்தில் விளையாட்டு மைதானம் இல்லை. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, விளையாட்டு மைதானம் அமைக்கவும் என்னை போன்ற ஏழை மாணவிகள் விளையாட்டில் வருவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என, தெரிவித்தார்.