/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிலம்பத்தில் அசத்தும் நெல்லிக்குப்பம் மாணவர்கள்
/
சிலம்பத்தில் அசத்தும் நெல்லிக்குப்பம் மாணவர்கள்
ADDED : ஆக 08, 2024 12:24 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்வியோடு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
தலைமையாசிரியர் தேவனாதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆரோக்கிய சுந்தரராஜ், அருணசிந்துஜா ஆகியோர் மாணவ மாணவிகளை விளையாட்டின் மீது ஆர்வம் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதனால் இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்து விளங்குகின்றனர்.
இப்பள்ளி 6ம் வகுப்பு மாணவர்கள் தேசிகா, சச்சின், தரணிதரன், பிரதீப் ஆகியோர், சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
கடந்த வாரம் பண்ருட்டியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர்.
அவர்களை தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.