/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஹாக்கி விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நெல்லிக்குப்பம் இளைஞரின் சேவை
/
ஹாக்கி விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நெல்லிக்குப்பம் இளைஞரின் சேவை
ஹாக்கி விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நெல்லிக்குப்பம் இளைஞரின் சேவை
ஹாக்கி விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நெல்லிக்குப்பம் இளைஞரின் சேவை
ADDED : ஜூலை 18, 2024 08:37 AM

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுாரை சேர்ந்தவர் சிவராஜ், 35. மத்திய அரசு மூலம் அரியானாவில் நடத்தப்படும் ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்து வந்த இவர், இ சேவை மையம் நடத்தி வருகிறார்.
விளையாட்டில் இருந்த ஆர்வம் காரணமாக நெல்லிக்குப்பம் ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளி மைதானத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஹாக்கி பயிற்சி கொடுக்க முடிவு செய்தார். அண்ணாகிராமம், கவரப்பட்டு, எய்தனூர், சுந்தரவாண்டி போன்ற பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறுவர்களுக்கு ஹாக்கி பயிற்சியை கடந்த 6 ஆண்டாக இலவசமாக நடத்தி வருகிறார்.
இவர்களின் கல்வி பாதிக்காத வகையில், காலை நேரத்தில் பயிற்சி அளிக்கிறார். தற்போது 30 க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அவரிடம் பயிற்சி பெற்ற 10 பேர் தமிழக விளையாட்டு ஆணையத்தில் இலவசமாக கல்வியும் பயிற்சியும் பெற்று வருகின்றனர்.
இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தமிழக அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் சிவராஜின் சேவையை பார்த்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பேட், பந்து போன்ற ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கியுள்ளார்.
தன்னால் சாதிக்க முடியவில்லை என்றாலும், வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், ஹாக்கி பயிற்சி அளித்து வரும் சிவராஜின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.