ADDED : மே 28, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பகுதியில் மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வானமாதேவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசு அனுமதியின்றி 3 மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்தனர்.
போலீசாரை கண்டதும் 3 பேரும் மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பியோடினர்.
நடுவீரப்பட்டு போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பியோடிய குறவன்குப்பம் முருகன், 48; திருமாணிக்குழி ராஜசேகர், 45; வி.காட்டுப்பாளையம் சங்கர், 45; ஆகியோர் மீது வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.