ADDED : ஆக 21, 2024 07:44 AM
பெண்ணாடம், : பெண்ணாடத்தில் ஹான்ஸ், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பதாக நல்லூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் மாரிமுத்து தலைமையில் நேற்று பெண்ணாடம் போலீஸ் உதவியுடன் சவுந்திரசோழபுரம் சாலையில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை செய்தபோது, பாண்டியன், 51, என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 4,270 ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, பெண்ணாடம் போலீசில் ஒப்படைத்தனர்.
புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய பாண்டியனை தேடி வருகின்றனர்.

