/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாஜி ஊராட்சி தலைவரை தாக்கிய இருவருக்கு வலை
/
மாஜி ஊராட்சி தலைவரை தாக்கிய இருவருக்கு வலை
ADDED : மே 30, 2024 05:32 AM
பெண்ணாடம்: மாஜி ஊராட்சி தலைவரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தரம், 65. முன்னாள் ஊராட்சி தலைவர். தற்போது அதே கிராமத்தில் ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கு ஆட்களை வைத்து வேலை செய்து வருகிறார்.
கடந்த 24ம் தேதி இரவு மாளிகைக்கோட்டம், அய்யனார் கோவில் தெருவில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ், திவாகர் ஆகியோர் எங்கள் தெருவில் முதலில் குழாய் பதிக்கவில்லை எனக்கூறி, சுந்தரத்தை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
சுந்தரம் கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.