UPDATED : செப் 19, 2026 04:49 PM
ADDED : செப் 19, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்:சி.கொத்தங்குடியில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிதாக வெண்கல சிலை அமைக்கப்டும் என நந்தனார் கல்விக் கழக தலைவர் மணிரத்தினம் தெரிவித்தார்.
சிதம்பரம் அடுத்த சி.கொத்தங்குடியில் உள்ள மார்பளவிலான அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக , அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை பார்வையிட்ட நந்தனார் கல்விக் கழக தலைவர் மணிரத்தினம், சொந்த செலவில் வெண்கலத்தில் புதிய அம்பேத்கர் சிலை அமைக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது, காங்., இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் கமலக்கண்ணன், நிர்வாகிகள் கஜேந்திரன், மணலூர் ரவி, பிரவீன், சுதாகர், வி.சி., மாவட்ட நிர்வாகி ஆதிமூலம், சங்கரன், சரத் உடனிருந்தனர்.
