/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மண்ணெண்ணெய் குடித்த புது மணப்பெண் சாவு
/
மண்ணெண்ணெய் குடித்த புது மணப்பெண் சாவு
ADDED : செப் 13, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த வெங்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி விஜி, 21. கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கடந்த செப்., 9ம் தேதி கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை விஜி குடித்தார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 11ம் தேதி இரவு விஜி, சிகிச்சை பலனின்றி இறந்தார். விஜியின் தாய் கல்பனா கொடுத்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.