ADDED : ஆக 04, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: திருமணமாகி இரண்டரை மாதத்தில் புதுப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சி.கீரனுாரை சேர்ந்தவர் சந்திரகாசு மகள் தேன்மொழி, 21. இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அம்புஜவல்லிப்பேட்டை குமார் மகன் ராஜேஷ் என்பவருக்கும், கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் கனிமொழி தனது தாய் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி வீட்டிலிருந்த தேன்மொழி காணவில்லை.
புகாரின்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.