ADDED : மே 16, 2026 06:13 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம், வான்பாக்கம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினார். வேணு கோபால சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
