/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டி.மாவிடந்தல் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்
/
டி.மாவிடந்தல் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்
ADDED : செப் 05, 2024 06:44 PM

விருத்தாசலம்:டி.மாவிடந்தல் கிராமத்தில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
மங்கலம்பேட்டை அடுத்த டி.மாவிடந்தல் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு 100 கே.வி.ஏ., மின் திறன்கொண்ட டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது.
மின் நுகர்வு அதிகமாக உள்ளதால், இப்பகுதியில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு, கிராம மக்கள் கடும் அவதியடைந்தனர். அதையடுத்து, மின்வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.7.62 லட்சம் மதிப்பில், 100கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
அது, நேற்று பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோ.பூவனுார் துணை மின் நிலைய உப கோட்ட பொறியாளர் பாரதி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் கதீஜா பீ, துணைத் தலைவர் காத்துான் பீ, மங்கலம்பேட்டை உதவி மின் பொறியாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் மின் செயற் பொறியாளர் சுகன்யா, புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார்.