/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி மாணவர்கள் சிலம்பத்தில் அசத்தல்
/
நெய்வேலி மாணவர்கள் சிலம்பத்தில் அசத்தல்
ADDED : ஆக 22, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி : மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் நெய்வேலி சிலம்ப கழக மாணவர்கள் பங்கேற்று பரிசுகள் வென்றனர்.
வேளாங்கண்ணியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் நெய்வேலி சிலம்ப கழக மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றெடுத்தனர்.
அவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட சிலம்பாட்டம் கழக தலைவர் துரைமணி பரிசு வழங்கி பாராட்டினார். நெய்வேலி சிலம்ப கழக ஆசான்கள் கலைச்செழியன், அல்போன்ஸ், அணிமேலாளர் விமலா, சிலம்ப கழக ஊடக பிரிவு பொறுப்பாளர் தாமோதரன், சிறப்பு அழைப்பாளராக தமிழ் வாள்வரி கலைக்கூட செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.