/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிலா பாலிகிளினிக்: சிதம்பரத்தில் திறப்பு
/
நிலா பாலிகிளினிக்: சிதம்பரத்தில் திறப்பு
ADDED : ஜூன் 13, 2024 05:57 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில், நிலா பாலிகிளினிக், குழந்தைகள் நல மருத்துவமனையை தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் திறந்து வைத்தார்.
சிதம்பரம் பச்சையப்பா பள்ளி அருகில், அனைத்து வசதிகளுடன் கூடிய 'நிலா பாலிகிளினிக்' குழந்தைகள் நல மருத்துவமனை, 3 அடுக்கு மாடி கட்டடத்தில் நேற்று திறக்கப்பட்டது. விழாவிற்கு, ஓய்வு பெற்ற நிர்வாக பொறியாளர் அருளானந்தம் வரவேற்றார். தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் மருத்துவமனையை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் இன்பநிலா, மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் ஹரிபிரவீன், டாக்டர் திவ்யா, டாக்டர் ஹரிபிரசாத் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.