/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கல்
/
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கல்
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கல்
என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கல்
ADDED : ஆக 02, 2024 01:07 AM

நெய்வேலி: என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த- தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக சென்று என்.எல்.சி., நிர்வாகத்திடம் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கினர்.
நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. அதன்தொடர்ச்சியாக என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கடந்தாண்டு ஜூலை 26ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த போராட்டத்தை சட்ட விரோதமானது என அறிவிக்கக்கோரி என்.எல்.சி., நிர்வாகம், ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. கடலுார் மாவட்ட கலெக்டர், கடந்த ஆண்டு ஆக.14ம் தேதி நடத்திய சமரச கூட்டத்தில், கோர்ட் தீர்ப்பு வரும் வரை வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது. கோர்ட் தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்க முடிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட், இப்பிரச்னையை 8 வாரத்திற்கும் மத்திய அரசு தீர்வு காண கடந்தாண்டு ஆகஸ்ட் 22ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு நடைமுறைக்கு வராததால், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மீண்டும் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் பணி நிரந்தரம் மற்றும் சங்க அங்கிகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அதனையொட்டி சங்கத்தின் சிறப்பு தலைவர் சேகர், தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை ஊர்வலமாக என்.எல்.சி., தலைமை அலுவலகத்தை நோக்கி சென்றனர். அவர்களை டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து நிர்வாகிகள் மட்டும் என்.எல்.சி., தலைமை அலுவலகத்திற்கு சென்று, மனிதவள துணை பொது மேலாளர் உமா மகேஸ்வரனிடம் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கினர்.