/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு துறைக்கு ' டாப் ரேங்கர்ஸ் எக்ஸ்லன்ஸ் விருது '

ADDED : செப் 04, 2024 04:51 AM

நெய்வேலி: என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு துறைக்கு, சிறந்த சமூக பொறுப்புணர்வு செயல் நடைமுறைகளுக்கான டாப் ரேங்கர்ஸ் எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டது.
டில்லியில் டாப் ரேங்கர்ஸ் மேனேஜ்மென்ட் அமைப்பினர் நடத்திய 24வது தேசிய மேலாண்மை உச்சி மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிங்களை சேர்ந்த அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், இந்திய அளவில் சமூக பொறுப்புணர்வு துறையில் சிறப்பாக செயல்பட்டதாக என்.எல்.சி., நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
இந்திய ரயில்வே வாரியம் மற்றும் ஏர் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வனி லோஹானி, விருதை வழங்கினார். என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி மற்றும் என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வுத்துறை, மக்கள் தொடர்புத்துறை செயல் இயக்குநர் பிரபு கிஷோர் பெற்றுக் கொண்டனர்.