/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடுப்பணை கட்ட பணம் இல்லை எழுதாத பேனாவிற்கு ரூ.85 கோடி பாண்டியன் எம்.எல்.ஏ., சாடல்
/
தடுப்பணை கட்ட பணம் இல்லை எழுதாத பேனாவிற்கு ரூ.85 கோடி பாண்டியன் எம்.எல்.ஏ., சாடல்
தடுப்பணை கட்ட பணம் இல்லை எழுதாத பேனாவிற்கு ரூ.85 கோடி பாண்டியன் எம்.எல்.ஏ., சாடல்
தடுப்பணை கட்ட பணம் இல்லை எழுதாத பேனாவிற்கு ரூ.85 கோடி பாண்டியன் எம்.எல்.ஏ., சாடல்
ADDED : ஏப் 05, 2024 05:14 AM

சிதம்பரம்: 'விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர கொள்ளிடத்தில், தடுப்பணை கட்ட பணம் இல்லை என்ற தி.மு.க., அரசு, எழுதாத பேனாவிற்கு, 86 கோடியில் கடலில் சிலை வைக்கிறது' என பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, மாவட்ட செயலாளர் பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் ஓட்டு சேகரித்தனர்.
குமராட்சி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினத்தில் துவங்கி, திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, உசுப்பூர், வல்லம்படுகை உட்பட 25க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் பிரசாரம் செய்தனர்.
இறுதியாக அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதிகளில், ஓட்டு சேகரித்தபோது பாண்டியன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொள்ளிடத்தில், தடுப்பணை கட்ட, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி முதல் கட்ட பணியை துவங்கியது.
அப்போது, கொரோனாவால் பணிகள் நின்றது. ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, தி.மு.க., அரசிடம், சட்டசபையில் கேட்டபோது, பணம் இல்லை என கைவிரித்தது. அதுமட்டுமின்றி, அந்த திட்டத்தையே நிறுத்தியுள்ளனர்.
விவசாயிகளின் உயிர்நாடியான, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட பணம் இல்லை என்ற தி.மு.க., அரசு, எழுதாத பேனாவிற்கு 86 கோடியில் கடலில் பேனா சின்னம் அமைக்கிறது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும், அப்போது நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், அமைப்பு செயலாளர், மாவட்ட அவைத் தலைவர் குமார், பொருளாளர், சுந்தர், இணைச் செயலாளர் ரங்கம்மாள், துணைச் செயலாளர் செல்வம், பேரூராட்சி செயலாளர் தமிழரசன், முருகேசன், உத்திராபதி.
ஒன்றியகுழு உறுப்பினர்கள் அமுதா ரவிச்சந்திரன், சேது மாதவன், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, மோகன், வையூர் சாந்தி, ஊராட்சி தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

