ADDED : ஜூலை 11, 2026 05:20 PM

அ நிறம் | அளவு
கடலுார்: ரயில் நிலையம் எதிரில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. ரயில் நிலையம் எதிரில் ரயில்வே நிர்வாகம் சிமென்ட் சாலை அமைக்க அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, அங்கு ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தை சிலர் சாலையாக மாற்றி ஆக்கிரமித்துள்ளதை அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 20 வீட்டு உரிமையாளர்களுக்கு ரயில்வே போலீசார் நேற்று நோட்டீஸ் வழங்கினர்.
