/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கே.பஞ்சங்குப்பத்தில் வீட்டை காலி செய்ய நோட்டீஸ்
/
கே.பஞ்சங்குப்பத்தில் வீட்டை காலி செய்ய நோட்டீஸ்
ADDED : ஜூன் 25, 2024 07:12 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே, வாய்க்காலை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி, 26 வீடுகளை காலி செய்ய, நீர்வளத்துறை நோட்டீஸ் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சிக்குட்பட்ட கே.பஞ்சங்குப்பம் ரோட்டு பகுதியில், சுமார் 50 ஆண்டுகளுளாக 26 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, 2000ம் ஆண்டு அரசு சார்பில், பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுனாமிக்கு பிறகு, மாதா அமிர்தானந்தா அறக்கட்டளை சார்பல் வீடுகட்டி கொடுத்துள்ளனர். சிலர், பிரதமரின வீடு கட்டும் திட்டத்தில் வீடு, கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று புவனகிரி நீர்வளத்துறை உதவி பொறியாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் ரோட்டு தெருவில் உள்ள 26 வீடுகளில், வீட்டை காலி செய்ய 21 நாட்கள் கெடு விதித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதற்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த நோட்டிசில், நீர்வளத்துறைக்கு சொந்த மான கொத்தட்டை வாய்க் கால் ஒரு பகுதியை ஆக்கிரமித்து, வீடு கட்டியுள்ளீர்கள். ஜூலை 13ம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், வீட்டை அகற்றிவிட்டு, அதற்குண்டான செலவு தொகையை, தங்கள் மீது விதிக்கப்படும் என அந்த நோட்டீசில், கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.