நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப வெளி வளாக பயிற்சி
நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப வெளி வளாக பயிற்சி
ADDED : ஜூலை 16, 2026 08:23 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நல்லுார் அடுத்த திருமலை அகரம் கிராமத்தில், நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர ரகங்கள், விதை உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கி பேசினார்.
மேலும் விதை நேர்த்தி, உயிர் உரங்கள் பயன்பாடு, பசுந்தாள் உரங்கள் பயன்பாடு, சமச்சீர் உரமேலாண்மை, களை மேலாண்மை, நுண்ணுாட்டச்சத்து பயன்பாடு, நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குல், அதன் மேலாண்மை பற்றியும் ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு குறித்து விளக்கினார். அதன்பின், தமிழக வேளாண் பல்கலைக்கழக இணையதள செயலிகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள், கிசான் சாரதி செயலி பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கமளிக்கப்பட்டது.
இதில், விவசாயிகள் பலர் பங்கேற்றனர். விகடகவி உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
