ADDED : பிப் 26, 2025 05:02 AM
ராகவேந்திரர் அவதார ஸ்தலத்தில் உள்ள ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட சதவீதம் அதிகாரிகளுக்கு வழங்கி பணியினை பெற்று சில இடங்களில் முடித்தும், சில இடங்களில் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இதற்காக குறிப்பிட்ட பணிகளுக்கு பில் தொகை விடுவிக்க அதற்கான அதிகாரம் மிக்க அதிகாரி மீண்டும் குறிப்பிட்டத் தொகையை உறவினர் மற்றும் அங்கு பணியில் உள்ள ஓர் அதிகாரி மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் வசூல் தொகையை அவருடைய வீட்டிற்கு எடுத்துச்சென்று வழங்க வேண்டும் என்பது கட்டாய உத்தரவாக உள்ளது. இதனால் மீண்டும் கப்பம் கட்ட போதிய தொகை வழங்க முடியாமல், ஒப்பந்ததார்கள் சிலர் மன உளச்சலில் உள்ளனர்.
இதனால் முடிந்த பணிகள் பயன்பாட்டிற்கு வராமலும், முடியாத பணிகள் கிடப்பிலும் போடப்பட்டுள்ளது. அந்த அதிகாரி சக பெண் ஊழியர்களிடம் வழிந்து, வழிந்து பேசுவது தனிக் கதை.

