/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகள் பங்கேற்பதில்லை ஒன்றிய குழு கூட்டத்தில் புகார்
/
அதிகாரிகள் பங்கேற்பதில்லை ஒன்றிய குழு கூட்டத்தில் புகார்
அதிகாரிகள் பங்கேற்பதில்லை ஒன்றிய குழு கூட்டத்தில் புகார்
அதிகாரிகள் பங்கேற்பதில்லை ஒன்றிய குழு கூட்டத்தில் புகார்
ADDED : ஆக 29, 2024 07:41 AM

புவனகிரி: ஒன்றிய குழு கூட்டத்தில், அதிகாரிகள் பங்கேற்பதில்லை என, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
கீரப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமை யில் நடந்தது.
துணை சேர்மன் காஷ்மீர்ச்செல்வி விநாயகம், ஆணையாளர்கள் மோகன்ராஜ், ஆனந்தன் முன்னிலை வகித்தனர். துணை ஆணையர் ரமேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் இதுவரை மேற் கொள்ளப்பட்ட பணிகள், செலவினங்கள் மன்ற ஒப்புதலுக்கு வைத்தனர்.
அப்போது கவுன்சிலர் சாரதி பேசுகையில், கிராமப்புற மக்ளின் முக்கிய பிரச்னைகளான கால்நடை மற்றும் வேளாண்துறை சார்ந்த குறை, நிறைகளை தெரிவிக்க, அத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்பதில்லை என, குற்றம் சாட்டினார். இதே கருத்தை வலியுறுத்தி சிலர் கவுன்சிலர்கள் பேசினர்.
அப்போது, அதிகாரிகள் பதிலளிக்கையில், அனைத்து துறையினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இனி வரும் காலங்களில் அதிகாரிகள் பங்கேற்க வலியுறுத்துவோம் என்றனர்.
துணை ஆணையர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

