ADDED : ஜூன் 29, 2026 03:10 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நகராட்சி அதிகாரிகள் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும் நகராட்சி கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகள் காலை 6:00 மணிக்கு துாய்மை பணிகள், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை ஆய்வு செய்ய வேண்டுமென, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, உத்தரவிட்டது.
இதற்கிடையே, நெல்லிக்குப்பம் நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், இன்ஜினியர் கண்ணன், மேற்பார்வையாளர் ரமேஷ், துப்புரவு ஆய்வாளர் கேசவன் அவ்வப் போது, ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, குடிதாங்கி சாவடியில் நகராட்சி அதிகாரிகள் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என நேற்று ஆய்வு செய்தனர்.
