/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெட்டுப்போன மீன்கள் அழிப்பு சிதம்பரத்தில் அதிகாரிகள் அதிரடி
/
கெட்டுப்போன மீன்கள் அழிப்பு சிதம்பரத்தில் அதிகாரிகள் அதிரடி
கெட்டுப்போன மீன்கள் அழிப்பு சிதம்பரத்தில் அதிகாரிகள் அதிரடி
கெட்டுப்போன மீன்கள் அழிப்பு சிதம்பரத்தில் அதிகாரிகள் அதிரடி
ADDED : ஜூலை 09, 2024 05:49 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் மீன் மார்க்கெட்டில் அதிரடி ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்களை குப்பையில் கொட்டி அழித்தனர்.
மீன்கள் கெட்டுபோகாமல் இருக்க ரசாயனம் பயன்படுத்துவதாகவும், இதனால், மீன் சாப்பிடும் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்தது. அதையடுத்து, கடலோர மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று சிதம்பரம் நகராட்சி மீன் மார்க்கெட்டில், உணவு பாதுகாப்பு அதிகாரி பத்மநாபன், நடமாடும் பகுப்பாய்வக வாகனத்துடன் ஆய்வு மேற்கொண்டார். அதில், ஒவ்வொரு கடையிலும், மீன்களை எடுத்து நடமாடும் பகுப்பாய்வு வாகனம் மூலம் சோதனை செய்தனர். அப்போது ஒரு சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அவைகள் குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது. அப்போது, மீன் கடைக்காரர்களிடம், பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டனர்.
தொடர்ந்து. அதேபோல் பஸ் நிலைய பகுதியில் ஸ்விட் ஸ்டால், பழம் மற்றும் ஜூஸ் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்து செல்லப்பட்டது.