/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகளிடம் அடாவடி 'வசூல்' கண்டும், காணாத அதிகாரிகள்
/
விவசாயிகளிடம் அடாவடி 'வசூல்' கண்டும், காணாத அதிகாரிகள்
விவசாயிகளிடம் அடாவடி 'வசூல்' கண்டும், காணாத அதிகாரிகள்
விவசாயிகளிடம் அடாவடி 'வசூல்' கண்டும், காணாத அதிகாரிகள்
ADDED : ஆக 07, 2024 06:37 AM
பெண்ணாடம் அடுத்த அரியராவியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 2 வாரங்களுக்கு முன் துவங்கப்பட்டது.
சுற்றியுள்ள பெ.பூவனுார், நந்திமங்கலம், அரியராவி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், அறுவடை செய்து வரும் குறுவை நெல்லை விற்க மூட்டைகளாவும், தரையில் கொட்டி வைத்தும் காத்திருக்கின்றனர்.
அவ்வாறு காத்திருக்கும் விவசாயிகளிடம் ஆளும் கட்சியினர் நாங்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கொள்முதல் நிலையம் வாங்கி வந்துள்ளோம் என பேசி, மூட்டைக்கு 70 ரூபாய் வரை விவசாயிகளின் தன்மைக்கு தகுந்தவாறு பணம் வசூலிப்பதில் ஈடுபடுகின்றனர்.
அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நெல் வியாபாரிகளிடம் இருந்து லாரிகளில் வரும் மொத்த நெல் மூட்டைகளையும் அதிக கமிஷன் பெற்று கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் விவசாயிகளான எங்களுக்கு காலதாமதம் ஆவதுடன் மழை பெய்தால் சேதமாகும் அவலம் உள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் பல கொள்முதல் நிலையங்களில் அடாவடி வசூல் நடக்கிறது.
எனவே, கலெக்டர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்ய வேண்டும் என குறுவை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.