ADDED : மே 19, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை காளியம்மன்கோவில்தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம், 65; விவசாயி. இவர் கடந்த 10 ஆ்ண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 14ம் தேதி மதியம் 2.30 மணிக்கு உடல் வலி காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரது மகன் காளிதாசன் மற்றும் உறவினர்கள் உதவியுடன் புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீலமேகம் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
