ADDED : மே 01, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 75; இவர், நேற்று டி.வி.எஸ்., மொபட்டில், வீரநத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்ற கார் மோதியது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த சரவணன், 108 ஆம்புலன்ஸ் மூலம், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் இறந்தார்.
குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

