ADDED : ஜூன் 23, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம், ஜூன் 24–
சாலை விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பெண்ணாடம், கிழக்கு காலனியை சேர்ந்தவர் முருகேசன், 70; இவர் கடந்த, 21ம்தேதி இரவு 8:00 மணியளவில் பெண்ணாடத்தில் டீ குடித்து விட்டு தனது சைக்கிளில் திட்டக்குடி – விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பெண்ணாடம் பஸ் நிலையம் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த லாரி சைக்கிள் மீது மோதியதில் முருகேசன் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
