ADDED : ஜூலை 01, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ரயிலில் மோதி 60 வயது முதியவர் பலியானது குறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி ரயில் நிலையத்திற்கும், திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள பகுதியில் நேற்று காலை 6:30 மணிக்கு விழுப்புரம்- திருவாரூர் வரை செல்லும் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.
ரயில் தண்டவாளத்தை கடந்த போது 60 வயது மதிக்கதக்க முதியவர் ரயிலில் அடிப்பட்டு அடிப்பட்டு இறந்தார்.
இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து இறந்த முதியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.