/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் கொலை வழக்கு விருத்தாசலத்தில் ஒருவர் கைது
/
பெண் கொலை வழக்கு விருத்தாசலத்தில் ஒருவர் கைது
ADDED : ஆக 04, 2024 04:23 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி செல்லக்கிளி,37; இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 25ம் தேதி மாலை 3:00 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். படுகாயமடைந்த செல்லக்கிளி தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 29ம் தேதி இறந்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண்டனர்.
அதில், கிடைத்த தகவலின் பேரில் சின்னகண்டியங்குப்பத்தை சேர்ந்த ராஜவேல் மகன் முருகன், 54; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் செல்லக்கிளியிடம் தவறாக நடக்க முயன்றபோது, செல்லக்கிளி மறுத்ததால், அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அதன்பேரில் முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.