ADDED : மார் 25, 2024 05:38 AM
புவனகிரி: புவனகிரியில் சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.
புவனகிரி அடுத்த மேலமணக்குடி நாடார் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம், இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் வயலுக்குச் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார்.
அப்பகுதியில் உள்ள பள்ளி அருகில் சென்ற போது, பின்னாள் வேகமாக வந்த சித்தேரி ரோட்டுத் தெருவைச் சேர்ந்த சக்கரவர்த்தி ஓட்டி வந்த பைக் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த இருவரையும்
அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சக்கரவர்த்தி,50; இறந்தார்.
புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

