
பண்ருட்டி: நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் இரண்டு ரேஷன்கடைகள் திறப்பு விழா நடந்தது.
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேர்பெரியான்குப்பம், காட்டுக்கூடலுார் ஆகிய ஊராட்சிகளில் உள்ள முத்தாண்டிக்குப்பம், செம்மங்குப்பத்தில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 12.75 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு ரேஷன் கடைகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் விருத்தாசலம் எம்.எல்.ஏ.,ராதாகிருஷ்ணன், பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், செல்வகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ராஜலிங்கம், பி.டி.ஓ., சங்கர், கூட்டுறவு சங்க செயலாளர்வெங்கடேசன், முன்னாள் தலைவர் சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் குணசேரகன், ஊராட்சி தலைவர்கள் மணிவண்ணன், சக்கரவர்த்தி, கவுன்சிலர்கள் செந்தாமரை, அருள்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.