ADDED : மே 06, 2024 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் வர்த்தக சங்கங்கள் மூன்று பிரிவுகளாக செயல்படுவதால் வர்த்தகர் தினத்தன்றும் கடைகள் திறந்திருந்தன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 5ம் தேதி வர்த்தகர் தினமாக வர்த்தகர்கள் கொண்டாடுகின்றனர். அன்று பெரும்பாலும் கடைகளுக்கு விடுமுறை அளித்து சங்கங்கள் மூலம் நடக்கும் மாநாடுகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நேற்று வர்த்தகர் தினத்தன்று கடைகளை மூடி ஒத்துழைக்கும் படி நெல்லிக்குப்பம் அனைத்து தொழில் வர்த்தகர் சங்கம் கோரியிருந்தனர். அதன்படி அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் கடையை மூடியிருந்தனர்.
ஆனால் நெல்லிக்குப்பத்தில் வர்த்தக சங்கங்கள் மூன்று அணிகளாக செயல்படுகின்றனர். இதனால் மற்ற சங்கத்தை சேர்ந்த வர்த்தகர்கள் நேற்று வழக்கம் போல் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர்.