UPDATED : ஜூலை 14, 2024 08:15 AM
ADDED : ஜூலை 14, 2024 06:54 AM

கடலுார் : கடலுார்-புதுச்சேரி இ.சி.ஆர்., சாலை, கன்னியக்கோவில் ஸ்ரீனிவாஸ் கார்டன் எதிரில் தி காதி ெஹல்த் ஷாப்பி திறப்பு விழா நடந்தது.
பேராசிரியை டாக்டர் உஷாரவி திறந்து வைத்தார். விழாவில் தி சுசான்லி குரூப்ஸ் சேர்மன் டாக்டர் ரவி, சாய் டீரி ஹெர்பல்ஸ் அன்டு புட்ஸ் டாக்டர் பானுப்ரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து தி காதி ெஹல்த் ஷாப்பி நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் கவுதமன் கூறுகையில், 'மத்திய அரசின் அனுமதியோடு இயங்கும் தி காதி ெஹல்த் ஷாப்பியில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பு, தரமான வத்தி, பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர சிறு, குறு தானியங்கள், சிறு, குறு தானிய சேமியா, நுாடுல்ஸ், பாஸ்தா, இயற்கை குளியல் சோப்பு, 100க்கும் மேற்பட்ட மூலிகை பொடி, சித்தா, ஆயுர்வேதா மருந்துகள், இயற்கை சோப்பு, அவுல் வகைகள், எண்ணெய் என 500க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது' என்றார்.