ADDED : பிப் 22, 2025 09:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் சார் பதிவாளர் அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின் கடலூரில் நடந்த அரசு விழாவில் திறந்துவைத்ததையொட்டி, பரங்கிப்பேட்டை சேர்மன் தேன்மொழி சங்கர் குத்துவிளக்கேற்றினார்.
பரங்கிப்பேட்டையில், சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1.90 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டது. அதையடுத்து நேற்று முன்தினம் கடலூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதையடுத்து, அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பரங்கிப்பேட்டை சேர்மன் தேன்மொழி சங்கர் குத்துவிளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில், சார் பதிவாளர் பாலாஜி, உதவியாளர் நதியா, கவுன்சிலர்கள் அருள்முருகன்,ராஜேஸ்வரி வேல்முருகன், ரொகையாமா, சரவணன் மற்றும் அலுவலக ஊழியர்கள், பத்திர எழுத்தர்கள் பங்கேற்றனர்.

