/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திலகா பேக்கரி கிளை புவனகிரியில் திறப்பு
/
திலகா பேக்கரி கிளை புவனகிரியில் திறப்பு
ADDED : செப் 18, 2024 05:26 AM

புவனகிரி: புவனகிரியில் திலகா பேக்கரி புதிய கிளையை வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
சேத்தியாத்தோப்பை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் திலகா பேக்கரியின் புதிய கிளை, புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் கருணாநிதி தலைமை தாங்கினார். பேக்கரி உரிமையாளர் திலகா இளங்கோவன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், ஒன்றிய செயலாளர் மதியழகன், தங்கஆனந்தன், மனோகர், அரசு கூடுதல் வழக்கறிஞர் பழனிமனோகரன், பா.ம.க., தெற்கு மாவட்டத் தலைவர் தேவதாஸ்படையாண்டவர், ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் துரைமணிராஜன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் குத்து விளக்கேற்றினார். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பேக்கரியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி செந்தில்நாதன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி சதீஷ ்தினேஷ், முன்னாள் துணை சேர்மன் ராம்குமார், வால்காரமேடு பாலு, பாரதி பள்ளி நிர்வாகி அன்பழகன், சேர்மன் கந்தன், வர்த்தக சங்க செயலாளர் ரத்தினசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், அண்ணாஜோதி, சண்முகம், செல்லப்பாண்டியன், வினோதினி ராமச்சந்திரன், லதாசங்கர், சிவக்குமார், மணிகண்டசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திலகா பேக்கரி உரிமையாளர் செந்தமிழ்ச்செல்வி கருணாநிதி நன்றி கூறினார்.

