/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உயர் மின்அழுத்த கம்பம் அமைக்க புத்தரவல்லி கிராமத்தில் எதிர்ப்பு
/
உயர் மின்அழுத்த கம்பம் அமைக்க புத்தரவல்லி கிராமத்தில் எதிர்ப்பு
உயர் மின்அழுத்த கம்பம் அமைக்க புத்தரவல்லி கிராமத்தில் எதிர்ப்பு
உயர் மின்அழுத்த கம்பம் அமைக்க புத்தரவல்லி கிராமத்தில் எதிர்ப்பு
ADDED : மார் 02, 2025 04:22 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் புத்தர வல்லி கிராமம் வழியாக உயர் மின் அழுத்த கம்பம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் புதுச் சத்திரம் அடுத்த புத்திர வல்லி கிராமத்தின் வழியாக, ஆலப்பாக்கம் துணை மின் நிலையம் சார்பில், உயர் மின்னழுத்த மின்கம்பி மூலம் மின்சாரம் கொண்டு செல்ல மின்கம்பம் நட்டு மின்கம்பி இணைக்கும் பணி நேற்று நடந்தது.
இதன் மூலம் அய்யம் பேட்டை, ரெட்டியார்பேட்டை உள்ளிட்ட பகுதி களுக்கு மின் இணைப்பு எடுத்து செல்ல முடியும். இதற்காக மின்துறை ஊழியர்கள் நேற்று மின்கம்பம் நடும் பணியை தொடங்கினர். அப்பொழுது புத்திரவல்லி கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் மின்கம்பம் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, மின்வாரிய ஊழியர் களிடம் தகராறு செய்து பணியை நிறுத்தினர்.
புதுச்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.