/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

ADDED : ஆக 16, 2024 06:16 AM

பண்ருட்டி: அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி, நேற்று கிராமசபைக்கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் சரசுதெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., ராஜகுமாரன், துணை தலைவர் மணிகண்டன், ஊராட்சி செயலர் சங்கர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அங்கு செட்டிபாளையம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைப்பதற்குபொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
நகராட்சியுடன் இணைப்பதால் 4,000 தனி நபர்கள் பயன்பெறும்மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதி திட்டம், இலவச வீடு வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவி குழு மூலமாக பெரும் கடன் திட்டம் உட்பட பல்வேறு அரசு நலத்திட்டங்கள் பரிபோகும் நிலை வரும் என்பதால்அங்கு செட்டிபாளையம் ஊராட்சி மக்கள் கருப்பு துணியை முகத்தில் கட்டி எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
கிராம மக்கள் சார்பில், தொடர் போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தனர்.