ADDED : ஏப் 30, 2024 05:41 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ்., குடிநீர் வழங்கினர்.
கோடை வெயிலையொட்டி, மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமையிலான சுகாதார குழுவினர், மங்கலம்பேட்டை சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகம், காய்கறி மார்க்கெட், பஸ் நிறுத்தம், கடைவீதி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி, மாத்துார், புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தம், விருத்தாசலம் பஸ் நிலையம், விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு உடல் சோர்வு ஏற்படாமல் தடுக்க ஓ.ஆர்.எஸ்., குடிநீர் வழங்கினர்.
மேலும், கோடைகாலத்தில் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.
