/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் திருப்பணிக்கு பந்தக்கால் நடும் விழா
/
பாடலீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் திருப்பணிக்கு பந்தக்கால் நடும் விழா
பாடலீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் திருப்பணிக்கு பந்தக்கால் நடும் விழா
பாடலீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் திருப்பணிக்கு பந்தக்கால் நடும் விழா
ADDED : மே 13, 2024 05:37 AM

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் திருப்பணிக்கு பந்தக்கால் நடும் விழா நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலாலயம் நடந்தது. தொடர்ந்து பாடலீஸ்வரர் சன்னதி ராஜகோபுரம் திருப்பணிகள் துவங்குவதற்கு பந்தக்கால் நடும் விழா நடந்தது. சிறப்பு பூஜைகள் நடைபெற்று, வேத மந்திரம் முழங்க பந்தக்கால் நடப்பட்டது.
அப்போது, டாக்டர் பிரவீன் ஐயப்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் சுப்ரமணியன், உபயதாரர்கள் வெங்கடேசன், உதயவேலு, செல்வமூர்த்தி, குமரன், சங்கர் மற்றும் துரை ஓட்டல் ரவி, சித்ராலயா ரவிச்சந்திரன், ரோட்டரி பிரையோன், ரமேஷ், ஓம் பிரகாஷ், சன் பிரைட் பிரகாஷ், உத்திரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.