/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்
/
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்
ADDED : ஆக 06, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை ஊராட்சியில், தமிழ்நாடு வாணிப கிடங்கு சார்பில் தற்காலிக கொள்முதல் நிலையம் அங்காளம்மன் கோவில்அருகே செயல்பட்டு வருகிறது.
இங்கு, நேற்று முன்தினம் 20 விவசாயிகளின் 500 மூட்டை நெல் விற்பனைக்காக கொண்டு வந்தனர். கட்டடம் இல்லாமல் திறந்த வெளியில் 300 நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் 300 நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியது.இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.