/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய குடிநீர் தொட்டி கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
/
புதிய குடிநீர் தொட்டி கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
புதிய குடிநீர் தொட்டி கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
புதிய குடிநீர் தொட்டி கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 02, 2024 05:34 AM
பண்ருட்டி:பண்ருட்டி அருகே தரமற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடித்துவிட்டு புதியதாக கட்டித்தரக்கோரி, ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு, உள்ளாட்சி அதிகாரிகள் பொறுப்பில் இருந்தபோது 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
பின் உள்ளாட்சி தேர்தலுக்கு பின்வந்த நிர்வாகிகள், கிராமங்களில் பைப் லைன் போட்டபின் புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கிடலாம் என முடிவு எடுத்தனர்.
இதற்கான பணிகள் முடிந்து கடந்த வாரம் பைப் லைன் கொடுத்து, புதிய மேல்நிலைத்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் குடிநீர் தேக்கதொட்டியில் நீர் கசிவு ஏற்பட்டு வந்ததால் குடிநீர் ஏற்றுவதை நிறுத்தினர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சி தலைவர் அலுவலகத்தை நேற்று காலை 11:00 மணிக்கு முற்றுகையிட்டனர். அப்போது, மேல்நிலைதொட்டி தரமற்று கட்டப்பட்டுள்ளதால், இடித்துவிட்டு புதியதாக கட்டித்தர வலியுறுத்தினர். ஒப்பந்ததாரர், பி.டி.ஓ., பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.
தகவலறிந்த பண்ருட்டி ஒன்றிய துணை பி.டி.ஓ., செந்தில், குடிநீர் தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். அதையடுத்து, முற்றுகை கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.